உங்கள் குறள் நூலைத் திருக்குறள் மாநாட்டில் வெளியிட விரும்புகிறீர்களா?
அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024) சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். திருக்குறள் தொடர்பாக வெளியிட உள்ள புதிய நூல்கள் / அறிமுகத்திற்காக அனுப்பப்பெறும் முன் வெளியிடப்பட்ட நூல்கள்…
மூன்றாவது திருக்குறள் மாநாடு – முதல் நாள் அமர்வுகள்
புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 நாள்களில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் அமர்வு – ஒளிப்படங்கள் படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.
திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை!
திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை! தில்லியில் கடந்த 23,24 ஆம் நாள்களில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் நிறைவு விழாவிலும் தன்னார்வத்துடன் பங்கேற்றார். அப்போது அவர் “பிரான்சில் 06., 07.08.2020 இல் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அரசு நிதி யுதவி செய்யும். இந்த மாநாடு முடிந்து விட்டாலும் சிறிய அளவு உதவியேனும் செய்வோம். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு…
வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு
வரும் வைகாசி 6, 2046 சூன் மாதம் 21 – ஆம் நாள் வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு நடைபெற உள்ளது. திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் , கவிதைகள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்வரி: tamilkavinjarsangam@gmail.com திருக்குறள் தேசிய நூலாகுவதற்கு ஒத்துழைப்பு தரும் வண்ணம் அனைவரும் இம் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமெனத் தமிழன்புடன் கேட்டுக்கொள்கிறேன். – க.ச.கலையரசன், தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம். 9551547027
சிட்டினி நகரில் திருக்குறள் மாநாடு
ஆசுதிரேலியாவில் பேரா.மறைமலை இலக்குவனார் ஆத்திரேலியா சிட்டினி நகரில் சித்திரை 13, தி.பி.2045 / ஏப்பிரல் 26, கி.பி. 2014 சனிக்கிழமை திருக்குறள் மாநாடு நடைபெற்றது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார், ஈழப் பேராசிரியர் சிவகுமாரன் மயிலாடுதுறைப் பேராசிரியர் சிவச்சந்திரன் முதலான பலரும் கலந்து கொண்டனர். ”திருக்குறள் ஒரு பல்துறைக்கலைக்களஞ்சியம்”என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவாற்றினார். குறள் பரப்பாளர் எழுத்தாளர் மாத்தளை சோமு அங்குள்ள தமிழன்பர்களுடன் இணைந்து இம் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.