அறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை – இ.பு.ஞானப்பிரகாசன்
அறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை மூன்றாம் பாலின அல்லது இருபாலினத் தோழர்களைக் குறிக்கும் ‘அலி’ என்னும் பழைய சொல் இக்காலத்தில் தவறாக ஆளப்படுகிறது. ‘அல்’ என்றால் இல்லை எனப் பொருள். எனவே ஆண், பெண் ஆகிய இரு பால் தன்மைகளும் ‘அல்லாதவர்’ எனும் பொருளிலேயே ‘அலி’ எனும் சொல் பண்டைக் காலத்தில் உருவாக்கப்பட்டது. எனினும் இதுவே பிற்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரைக் கிண்டலுக்கும் பகடிக்கும் ஆளாக்கப் பயன்படுத்தப்பட்டதால் ‘திருநங்கை’ எனும் அழகுத் தமிழ்ப் புதுச் சொல்லால் இன்று அழைக்கிறோம். எழுத்தாளர்கள்,…
காவல்துறையில் முதல் திருநங்கை சார் ஆய்வாளர்
இந்தியக் காவல்துறையின் முதல் திருநங்கை பிரித்திகா யாசினி! இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறையில் சார்ஆய்வாளராகத் திருநங்கை ஒருவர் சேர்ந்துள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி என்பவரே அவர். ஆனால், எளிதில் இந்தப் பதவி இவருக்குக் கிடைக்கவில்லை. ஆதலின் காவல்துறையையோ அரசையோ பாராட்ட ஒன்றுமில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்தாம் பாராட்டிற்குரியவர்கள். திருநங்கை பிரித்திகா யாசினி சேலம் மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் முதலில் காவல் சார் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தபொழுது மூன்றாம் பால் என மறுக்கப்பட்டார். விண்ணப்பத்தை ஏற்பது…
தமிழிய வரலாற்றில் திருநங்கைகளின் தொன்மங்கள்
உரை: எழுத்தாளர் பிரியாபாபு திருநங்கைகளின் இன்றைய தடைகள் உரை: சொப்ணா & சிரீநிதி இடம்: காந்தி அருங்காட்சியகம், மதுரை 20. நாள்:ஆனி 29, 2045 / 13.07.2014, ஞாயிறு நேரம்: மாலை 4:30 மணி அனைவரும் வருக…. ஒருங்கிணைப்பு: நாணல் நண்பர்கள் குழு & நேயா நற்பணி மன்றம் 9629127102, 9944061111 https://www.facebook.com/nammavaralaaru
திருநங்கை சுவப்னாவின் போராட்ட அழைப்பு
என்னுடைய பள்ளிச்சான்றிதழ்களில் ஆண் பெயர் உள்ளது. இது போன்ற நேர்வுகளால் எங்களுடைய வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, எனக்கு, தனியார் நிறுவனத்தில் வேலைகிடைத்த போது சான்றிதழ் சரிபார்க்கும் நிகழ்வுக்குச் சென்றேன். ஆனால் அங்கிருந்த அலுவலர் எனது சான்றிதழில் ஆண் பெயரைப் பார்த்துவிட்டுப் பொய்யான சான்றிதழை தருகிறாயா என்றார். நான் ஒரு மாற்றுபாலினப் பெண் (திருநங்கை) என்றேன். ஆனால் அவர் என்னை நம்பவில்லை அந்த வேலை எனக்கு கிடைக்கவில்லை. இவ்வாறுதான் தமிழ்நாடு தேர்வாணையம்(TNPSC) சரிபார்ப்பிலும் சான்றிதழ் குழப்பமிருந்தது. எனவே நானும் எங்களது தோழிகளும் பள்ளிக்கல்வி இயக்குநரிடம்…
செய்திக்குறிப்புகள் சில : அகரமுதல இதழ் 18
மும்பையில், 1 உரூபாய்க்கு 1 புதுப்படி(இலிட்டர்) நீர் தரும் எந்நரேமும் இயங்கும் நீர்ப்பொறியை வந்தனா நிறுவனம் (Vandana Foundation) என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மன்கார்டு என்ற இடத்தில், இதனை அமைத்துள்ளது. இதில்,கட்டண அட்டை மூலம் தண்ணீர் பெறலாம்.. சொகுசுப் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டிற்காகவும் பிற தகவல்களுக்காவும் கருப்புப் பெட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது; பயணிகள் இடுப்புவார் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பயன்பாட்டிலுள்ள பேருந்துகளில் இவற்றை அறிமுகப்படுத்த சட்டம் கொணருவதுடன், புதிய பேருந்துகள் இவற்றுடன்தான் விற்கப்பட வேண்டும் என்று நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது….