ஊரும் பேரும் 45 : இரா.பி.சேது(ப்பிள்ளை: தலமும் கோவிலும்
(ஊரும் பேரும் 44 : இரா.பி.சேது(ப்பிள்ளை): மாடமும் மயானமும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 45 தலமும் கோவிலும் கருவூர்-ஆனிலை பழங் காலத்தில் தமிழ் நாட்டிற் சிறந்து விளங்கிய நகரங்களுள் ஒன்று கருவூர் ஆகும். அதன் பெருமையைச் சங்க நூல்களும் சமய நூல்களும் எடுத்துரைக்கின்றன. “திருமா வியனகர்க் கருவூர்” என்று அகநானூறும், “தொன் னெடுங் கருவூர்” என்று திருத்தொண்டர் புராணமும் கூறுதலால் அதன் செழுமையும் பழமையும் நன்கு புலனாகும். ஆன்பொருநை என்னும் ஆம்பிராவதி யாற்றின் வடகரையில் அமைந்த கருவூர் பண்டைச் சோழ மன்னர் முடி…
ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும்
(ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி) தென்னார்க்காட்டுக் கடலூர் வட்டத்தில் திருத்தளூர் என வழங்கும் திருத்துறையூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தவநெறி என்பது சாசனத்தால் அறியப்படுகின்றது.30 ஊரும் பேரும் 43 அட்டானமும் அம்பலமும் துறையும் நெறியும் கோயிற் பெயர்களாக அமைந்தவாறே அட்டானம், அம்பலம் என்னும் ஆலயப் பெயர்களும் உண்டு. வீரட்டானம் தமிழ் நாட்டில் வீரட்டானம் என்று விதந்துரைக்கப்படும் சிவப் பதிகள் எட்டு என்பர். “அட்டானம் என்றோதிய நாலிரண்டும்” என்று திருஞான சம்பந்தர் அவற்றைக் குறித்துப் போந்தார். கெடில…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 5 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.(திருவள்ளுவர், திருக்குறள் 271) ஐம்பூதங்கள் சேர்க்கையே இப்பெரு உலகம். உலகம் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் ஐம்பூதங்களின் சேர்க்கை என்பதுதான் அறிவியல். இந்த அறிவியல் செய்தியைத் திருவள்ளுவர் மேற்குறித்த குறட்பா மூலம் தெரிவிக்கிறார். வஞ்சக மனம் கொண்டு அதனை மறைத்து வெளியில்…
எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக! -இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி
எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக! உலகிலேயே மிகவும் கொடுமையானதாகச் சட்டப்படி விடுதலை செய்யப்பட வேண்டிய எழுவரைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதைக் கூறலாம். இதனால், இவர்களும் இவர்களின் குடும்பத்தினரும் துயரங்களில் உள்ளனர். எழுவர் தொடர்பில், சட்டம் பயின்ற மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த, சட்டப்பேரவைத் துணைத்தலைவராக இருந்த திருநாவுக்கரசர் கொலையில் ஈடுபட்டவர்கள் மீது கருணை காட்டுவது ஏற்புடையதல்ல என்று உளறியிருக்கிறார். நல்லவர்களுக்குக் கருணை காட்ட என்ன தேவை உள்ளது? குற்றம் புரிந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும்தானே கருணை காட்ட வேண்டும். ஆளுநருக்கு இது தொடர்பில் யாரும் அழுத்தம் கொடுக்கக்…
கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்! நாம் விரும்பும் கருத்துகளுக்கேற்ற தலைவர்களைப் பின்பற்றி அவர்களது கட்சியில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். அல்லது நமது கொள்கைகளுக்கேற்ற கட்சியை விரும்பி அதன் தலைவர் மீது பற்று வைக்கின்றோம். ஆனால், நாம் விரும்பும் கொள்கைகளில் இருந்து அல்லது நம்மை ஈர்த்த கொள்கைகளில் இருந்து தலைவர்கள் விலகினாலும், நாம் கொத்தடிமைகளாக இருந்து அவற்றுக்கு மாறான கருத்துகளைத் தெரிவிக்கும் தலைவர்களைப் போற்றுகிறோம். இந்தக் கொத்தடிமைத்தனத்தால்தான் நாடு அழிவினைச் சந்திக்கிறது. எனவே, நாம் கொள்கைளுக்கு மாறாகக் கடசியும் தலைவர்களும் தடம் புரண்டால் நம் எதிர்ப்பைத்…
முகிலை இராசபாண்டியனின் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு 26
ஆவணி 25, 2048 ஞாயிறு 10.09.2017 மாலை 5.00 நேரு அரசு மேனிலைப்பள்ளி கல்லூரிச் சாலை, நங்கநல்லூர் ஞாலம் இலக்கிய இயக்கம் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு 26 திருநாவுக்கரசர் 3 : தொடர் பொழிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் தலைமை : கவிமாமணி க.குணசேகரன்
தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 5: இலக்குவனார் திருவள்ளுவன்
5 சங்கப் புலவர்கள் வழியில் மட்டுமல்லாமல் சமயக் குரவர்கள் வழியிலும் பாடல்களை இயற்றியுள்ளார் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள். மாணிக்க வாசகர் இயற்றிய ‘போற்றித் திருவகவல்’ சிவபெருமான் குறித்தது. இதே போல் தமிழ்க்கடல் மறைமலையடிகளை நாடு போற்ற வேண்டும் எனக் கருதிய பேராசிரியர் பின்வருமாறு பாடியுள்ளார். “தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்த தலைவனே போற்றி! தமிழ் காக்கும் மறவர்களின் எண்ணத்தில் நிறைந்திருப்பவரே போற்றி! இந்தி மொழி என்னும் இருட்படலத்தை விலக்கிய செங்கதிர் ஒளியே போற்றி! தமிழ்நலம் நாடுவார்…