வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. திருந்தச் செய்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.22.தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 23. திருந்தச் செய்தல் 221.திருந்தச் செயலியல் பொருந்தச் செய்தல். திருந்தச் செய்தல் என்பது சிறப்பான முறையில் ஒரு செயலைச் செய்வது ஆகும். அழகு நிறைவு மமைவுறச் செய்தல். திருந்தச் செய்தல் என்பது பொருத்தமான முறையில் முழுமையாகச் செய்வது ஆகும். 223.திருந்தச் செய்தலே செய்தற் கிலக்கணம். ஒரு செயலைச் செய்யும் முறையானது திருந்தமாகச் செய்வதே ஆகும். 224.திருந்தச் செயல்பல சீர்களைக் கொணரும். திருந்தமாகச் செய்வது பல பெருமைகளை ஏற்படுத்தும். திருத்தமில் செயலாற் சீர்பல நீங்கும். திருத்தமில்லாத செயல்களால்…