கவிஞர் மு.முருகேசிற்குத் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
சிறந்த சிறுகதை நூலிற்காகக் கவிஞர் மு.முருகேசிற்கு விருது வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசு எழுதிய ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலுக்குத், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான விருது வழங்கப்பட்டது. திருப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகளைஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பூர் பாரதி தோட்டத்தில்…