தேனிப் பகுதியில் மந்தை இல்லாமல் தடைப்படும் திருமணங்கள்   தேனிமாவட்டம் அருகே உள்ள கதிரப்பன்பட்டி, தண்ணீர்ப்பந்தல், அ.வாடிப்பட்டி, கோட்டார்பட்டி முதலான சில சிற்றூர்களில் இன்றும் பழமை மாறாமல் ஊர்மந்தையில் வைத்து திருமணங்கள் நடைபெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.   தற்பொழுது மாறிவரும் காலச்சூழலுக்கேற்ப மந்தைகள் பிற பயன்பாடுகளுக்கு வலிந்து உள்ளாக்கப்பட்டமையினாலும் மந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமையாலும் திருமணங்கள் தடைப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.  எந்தச் சமூகமாக இருந்தாலும் பந்தல்கால்/கொட்டகைக்கால் நடும் பழக்கம் இன்றளவும் உள்ளது. வசதிபடைத்தவர்கள் திருமணம், மண்டபத்தில் நடத்தினாலும் பந்தல்கால்/கொட்டகைக்கால் நடும் பழக்கம் இன்று வரை…