தோழமையோடு பழகுகின்ற தோழர்ஆனைமுத்து  -புதுவைத் தமிழ்நெஞ்சன் பகுத்தறிவுப் பெட்டகம் சிந்தனைக் கருவூலம் தோழர் ஆனைமுத்து மாந்தநேயத் தொடர்பை ஏற்படுத்தும் அறிவுப் பாலம் ஓய்வறியா அவருழைப்பை சொல்லும் இந்த ஞாலம் அறிவே துணையெனச் சொல்லுவார் மடமையை பகுத்தறிவுத் தீயில் தள்ளுவார் ஆரியத்தை வீழ்த்தி வெல்லுவார் அறியாமையைக் கொய்வார் ஆரியத்தை வைவார் இனமான ஆடையினை நெய்வார் அறிவு மழையை அகத்தினிலே பொழிவார் குரலில் இடி..! போடுவது பொடி..! ஆனைமுத்தைப் படி..!