கண்டனப் பொதுக்கூட்டம் , சென்னை
வைகாசி 06, 2049 புதன் 20.6.2018 அன்று மாலை 5 மணி தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலை, சென்னை தமிழக மக்கள் முன்னணி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைதைக் கண்டித்தும், தோழர்.பெ.மணியரசன் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும் கண்டனப் பொதுக்கூட்டம் தலைமை : தோழர்.பொழிலன் ஐயா.பழ.நெடுமாறன், தோழர் ்தியாகு, தோழர்.திருமாவளவன், தோழர்.தெகலான்பாகவி, திருமுருகன்காந்தி, ஒய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அணிவகுக்கின்றனர் !
இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு! மக்கள்தீர்ப்பாயத்தில் மே17 இயக்கத்தின் சான்றாவணங்கள்!
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, செருமனியில் பிரமென் நகரில் நிலையான மக்கள் தீர்ப்பாயம் திசம்பர் 7 முதல் 10 வரை உசாவல் நடத்தியது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் தென்னிசு ஏலிடே தலைமையிலான அத் தீர்ப்பாயத்தில் பன்னாட்டுச் சட்ட சட்ட வல்லுநர்கள், இனப் படுகொலை வழக்குகள் தொடர்பான வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள் முதலான பலரும் இடம்பெற்றிருந்தனர். இத்தீர்ப்பாயத்தில் ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசு இனப்படுகொலையை…