என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 11. திருமுருகாற்றுப்படை

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 10. மெய்ம் மலிந்து நகைத்தேன்-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 8. திருமுருகாற்றுப்படை அறிமுகம் திருமுருகாற்றுப் படை, வீடுபேறு அடைதற்கு உரிய நல்லூழ் உடையான் ஒருவனை, அவ்வீடு பேற்றினை பெற்றான் ஒருவன், முருகக் கடவுளிடத்தே செல்க: சென்றால் வீடுபேறு பெறுகுவை” என வழி கூறியதாகப் பாடப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் வரும் பொருநராற்றுப்படை முதலியன எல்லாம், பொருளைப் பெறுவோர் பெயரால் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை பொருள் தரும் தலைவன் பெயரால் வழங்கும் சிறப்புடையது. இதற்குப் புலவராற்றுப்படை என்றோர் பெயரும் இருந்தது என்பது,…

மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி : திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டி : மாணவர்களுக்குப் பாராட்டு

மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி :  திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டி : மாணவர்களுக்குப் பாராட்டு    தேவகோட்டை: சௌபாக்கிய துருக்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பாராட்டு விழா  நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை  வாசுகி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பரிசு பெற்ற மாணவர்களான திவ்விய பாரதி, அசய், பிரசித்து, கனிட்கா, முத்தையன், திவ்வியசிரீ, சத்தியா, அம்முசிரீ.மகாலெட்சுமி, அசய் பிரகாசு, பாக்கியலெட்சுமி, நந்தகுமார், இராசேசு, உமா மகேசுவரி,…

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! – தமிழரசி

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! கதைப்பாத்திரங்கள்: சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர் [திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு நாரதர் தளர் நடை நடந்து வருகிறார்] நாரதர்: சம்போ மகாதேவா! சம்போ மகாதேவா! முருகன்: நாரதர் வருகிறார் பின்னே! தாரகம் வருகிறது முன்னே! ஏதோ சிறப்பு இருக்க வேண்டும். பார்வதி: நாரதர் பூலோகம் சென்றிருப்பதாக வாணி கூறினாள். முருகன்: பூலோகமா? அங்கே நடக்கும் கலகம் போதாதென்று நாரதர் கலகமும் வேண்டுமா? சிவன்: [சிரித்து] முருகா!…