உழப்பின் வாரா உறுதிகள் உளவோ? – பட்டினத்தடிகள்
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ? உழப்பின் வாரா உறுதிகள் உளவோ கழப்பின் வாராக் கையற வுளவோ அதனால் நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து அன்பென் பாத்தி கோலி முன்புற ……(5) மெய்யெனும் எருவை விரித்தாங் கையமில் பத்தித் தனிவித் திட்டு நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று …..(10) சாந்த வேலி கோலி வாய்ந்தபின் ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக் கருணை இளந்தளிர் காட்ட அருகாக் காமக்…
தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! – 2 : தமிழரசி
தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! தொடர்ச்சி கதைப்பாத்திரங்கள்: சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர் [திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு தளர் நடை நடந்து வந்த நாரதருடன் அவர்கள் உரையாடல் தொடர்கிறது]. முருகன்: வேதம் என்னும் தமிழ்ச்சொல் ‘வே’ என்பதன் அடியாகப் பிறந்தது. அது வேர் என்பதன் மூலமாகும். ‘தம்’ என்பது பெயர் விகுதி. எனவே தமிழில் வேதம் என்பது மூலநூல் எனப்பொருள் தரும். வடமொழியில் வேதம் என்ற சொல் வித்து – அறிவு…
அல்லல் அறுப்பானை வாழ்த்துக! – மாணிக்கவாசகர்
அல்லல் அறுப்பானை வாழ்த்துக! சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறர் உருவம் யான்எனதென் உரைமாய்த்துக் கோதில்அமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே! – மாணிக்கவாசகர்
தமிழைச் சிதைக்கலாமா? இலக்குவனார் திருவள்ளுவன் நேர்முகம் – கவிமணி
நாள் வைகாசி 16, 2045, மே 30, 2014 பக்கம் 16 “தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடந்ததைக் கேள்விப்பட்டோம். தமிழ்க்காப்புக்கழகம், மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையுடனும் பிற தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி யிருந்தது. இது குறித்து மேலும் அறியத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனைச் சந்தித்தோம். அப்பொழுதுதான் இது சாதாரணமான கூட்டம் அல்ல! அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது எனப் புரிந்து கொண்டோம். அவரிடம் பேசிய விவரம் வருமாறு: தமிழுக்கான…