பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

1   பாட்டுக்கு ஒரு புலவராம் மாபெரும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் சமய நல்லிணக்கம், இறையொருமை, சாதி மறுப்பு, விடுதலை வேட்கை, நாட்டுப்பற்று, வீர உணர்வு, கல்விப்பற்று, தொழில் நாட்டம், பெண்ணுயர்மை, அறிவியல் உணர்வு, பொதுமை வேட்கை, வினைத்திறம் முதலிய பண்புகள் இணைந்த ஓர் ்அறிவுப் பெட்டகமே ‘புதிய ஆத்திசூடி’.   சப்பானிய மொழியின் குறுவரிப்பாடல்களைப் புதுமையாகக் கருதும் நாம், தமிழில் நாலடி வெண்பா, முவ்வரிச் சிந்து, ஈரடிக்குறள், ஒற்றையடி வரிப்பா(ஆத்திசூசடி, பொன்றை வேந்தன், வெற்றி வேற்கை முதலியன) ஆகியவற்றின் மரபார்ந்த சிறப்புகளை உணர்ந்து…

வாசிங்டன் சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டம்

பிப்பிரவரி 16-இல் வாசிங்டன் பகுதியில் நடந்த சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டமான “தமிழ் இலக்கியத்தில் சமயம்” மிகவும் நன்றாக நடந்து முடிந்தது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ”இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் வாசு அரங்கநாதன் சித்தம் பற்றித் ”திருமூலரும் எட்மண்ட் கூசெரியும்” (Edmund Husseri) தலைப்பில் நல்லதொரு உரை ஆற்றினார்கள்.                              …