ஊரும் பேரும் 53 : இரா.பி.சேது(ப்பிள்ளை): திருமேனியும் தலமும்
(ஊரும் பேரும் 52 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அரசரும் ஈச்சுரமும் – தொடர்ச்சி) திருமேனியும் தலமும் திருவிற்கோலம் ஈசன் கோயில் திரிபுராந்தகம் எனப்படும். திரிபுரங்களில் இருந்துதீங்கிழைத்த அவுணரை அழிக்கத் திருவுளங் கொண்ட இறைவன்வில்லெடுத்த கோலம் அங்கு விளங்குதலால் விற்கோலம் என்ற பெயர்அதற்கு அமைந்ததென்பர். “திரிதருபுரம் எரிசெய்த சேவகன் உறைவிடம்திருவிற்கோலமே” என்று தேவாரமும் இச்செய்தியைத் தெரிவிக்கின்றது.எனவே, ஈசனது திருமேனியின் கோலத்தைக் குறித்த சொல், நாளடைவில்அவர் உறையும் கோயிலுக்கும் பெயராயிற் றென்பது விளங்கும். இத் தகையவிற்கோலம் கூகம் என்ற ஊரிலே காட்சியளித்தது. என்று திருஞான சம்பந்தர் பாடுதலால், கூகம்…