பாடி எனப் பெயர் விளங்கும் ஊர்கள் – இரா.பி.சேது
பாடி எனப் பெயர் விளங்கும் ஊர்கள் முல்லை நிலத்திலே தோன்றும் ஊர்கள் பெரும்பாலும் பாடி என்று பெயர் பெறும். திருத்தொண்டராகிய சண்டேசுரர் ஆக்களை (பசுக்களை) மேய்த்து, ஈசனுக்குப் பூசனை புரிந்த இடம் திருஆப்பாடி என்று தேவாரம் கூறுகின்றது. கண்ணன் பிறந்து வளர்ந்த கோகுலத்தை ஆயர்பாடி என்று தமிழ் நூல்கள் குறிக்கின்றன. வட ஆர்க்காட்டில் ஆதியில் வேலப்பாடி என்னும் குடியிருப்பு உண்டாயிற்று. வேல மரங்கள் நிறைந்த காட்டில் எழுந்த காரணத்தால் அது வேலப்பாடி என்று பெயர் பெற்றதென்பர். நாளடைவில் காடு நாடாயிற்று. வேலப்பாடியின்…