திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா : சில படங்கள்

தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017  சென்னை திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா :  சில படங்கள் முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்கினார். விருதுகளும் விருதாளர்களும் திருவள்ளுவர் விருது – புலவர் வீரமணி பெரியார் விருது – பண்ருட்டி இராமச்சந்திரன் அம்பேத்கர் விருது – மருத்துவர் துரைசாமி அண்ணா விருது – கவிஞர் கூரம் துரை காமராசர் விருது – நீலகண்டன் பாரதியார் விருது – பேராசிரியர் கணபதிராமன் பாரதிதாசன் விருது – கவிஞர் பாரதி  திரு.வி.க….

விருதாளர்களைப் போற்றுவதுதானே சிறப்பித்தலாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

விருதாளர்களைப் போற்றுவதுதானே சிறப்பித்தலாகும்!   புதிய அரசின் முதல் விழா, திருவள்ளுவர் திருநாளாகவும் அறிஞர்களையும் ஆன்றோர்களையும் விருதுகள் அளித்துப் போற்றும் விழாவாகவும் நடைபெற்றது மகிழ்ச்சிக்குரியது.   இன்று (தை 02, 2048 / சனவரி 15, 2017) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்வளர்ச்சித்துறையின் திருவள்ளுவர் திருநாள் – விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. செய்தித்துறையினர் கட்டுக்கோப்பான முறையில் நடத்தினர். காவல்துறையினரும் கெடுபிடித் தொந்தரவு இன்றி,  அமைதியான  சூழலை உருவாக்கியிருந்தனர். அரங்கத்தில் இடமின்றித் திருப்பி அனுப்பவேண்டிய  சூழல் வரும்வரை அனைவரையும் உள்ளே அனுப்பிக்கொண்டுதானிருந்தனர். அரங்கத்தில்…

திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா

 சென்னை, கலைவாணர் அரங்கில்,  தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 காலை 10:30 மணிக்கு நடைபெறும்.  முன்னதாகக் காலை 9.00மணி முதல் கலைநிகழ்ச்சி நடைபெறும்.   சென்னை: தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருது பெறுவோர் பட்டியல், வெளியிடப்பட்டது. தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த, தமிழ் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு சார்பில், ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகின்றன.  இந்த ஆண்டு விருது பெறுவோர் பெயரை, முதல்வர் பன்னீர்செல்வம்,…