திருவள்ளுவர் நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் ?
உலகத் தமிழர்களுக்கு அடையாளமாக விளங்கும் திருவள்ளுவருக்கு ஆண்டுதோறும் ஒரு நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழக அரசு இந்நாளை திருவள்ளுவர் நாளாக அறிவித்த போதிலும் இந்த நாளை உலகத் தமிழர்கள் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியைத் தமிழர்களிடைய அரசு கொண்டு செல்லவில்லை. தமிழ் அமைப்புகள் மட்டும் தங்களால் முடிந்தவரை சிறிய அளவில் இந்நாளில் நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இந்நாளில் அறியப்பட வேண்டிய திருவள்ளுவரின் புகழை இன்று தமிழர்களே அறியாத நிலை தான் இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையை நாம்தான் மாற்ற வேண்டும்….
கரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்
கரூர் திருக்குறள் பேரவை சார்பாகத் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் 11-01-14 அன்று நடைபெற்றது. கவிஞர் நாமக்கல் நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்தார். திருக்குறள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ1500 விலைகொண்ட 10 தொகுதிகள் கொண்ட சைவ சமய விளக்க நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேனாள் கல்லூரி முதல்வர் கருவை பழனிச்சாமி, கவிஞர் கடவூர் மணிமாறன், பாவலர் பள்ளபட்டி எழில் வாணன், மணப்பாறை திருக்குறள் நாவை சிவம் , வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன், கவிஞர் கருவூர் கன்னல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.