திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்! தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியம், சங்க இலக்கியம், குறள்நெறி ஆகியவற்றைப் பரப்புவதையும் தமிழ்க்காப்புப் பணிகளையும் தம் வாணாள் தொண்டாகக் கருதிப் பாடுபட்டவர்; தம் மாணவப்பருவத்தில் இருந்தே இப்பரப்புரைப் பணிகளிலும் காப்புப் பணிகளிலும் ஈடுபட்டவர்; தாம் பணியாற்றிய இடங்களில் எல்லாம் திருவள்ளுவருக்கு விழாக்கள் எடுத்தும் திருக்குறள் வகுப்பு நடத்தியும் குறள்நெறி பரப்பிய சான்றோர்; குறள்நெறி முதலான இதழ்கள் மூலமும் திருவள்ளுவர் புகழ் போற்றிய ஆன்றோர்.   “இன்றைய சூழ்நிலையில் மக்கள் அமைதிவாழ்வு பெறவும், பசி, பிணியற்று இன்புற்று…