ஊரும் பேரும் 55 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – திருவாக்கும் ஊர்ப் பெயரும்
(ஊரும் பேரும் 54 : இறையவரும் உறைவிடமும் – தொடர்ச்சி) திருவாக்கும் ஊர்ப் பெயரும் தேவாரம் பாடிய மூவருக்கும் சைவ உலகத்தில் அளவிறந்த பெருமையுண்டு. அவர்கள் திருவாக்குப் பொன் வாக்காகப் போற்றப்படும். இத்தகையசீர்மையைச் சில ஊர்ப் பெயர்களால் உணரலாகும். அழகார் திருப்புத்தூர் பதிகள் பலவுண்டு. அவற்றுள் வேற்றுமை தெரிதற் பொருட்டு ஒருபுத்தூரைத் திருப்புத்தூர் என்றும், மற்றொரு புத்தூரைக் கடுவாய்க்கரைப்புத்தூர் என்றும், பிறிதொரு புத்தூரை அரிசிற்கரைப் புத்தூர் என்றும்தேவாரம் குறிப்பதாயிற்று. அவற்றுள் அரிசிற்கரைப் புத்தூர், அரிசில்ஆற்றங்கரையில் அமைந்ததாகும்.1 கண்ணுக்கினிய செழுஞ் சோலையின்நடுவே நின்ற அவ்வூரை அழகார்…