மாற்றத்தை விரும்பும் மக்கள் – திருவாரூர்ச்செல்வன்
மாற்றத்தை விரும்பும் மக்கள் கடந்த தேர்தல்களைவிட இத்தேர்தலில் மக்கள் மனநிலை மாறியுள்ளது. பொதுவாக இதற்குமுன்பும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினர். ஆனால் அவர் இல்லாவிட்டால் இவர், இவர் இல்லாவிட்டால் அவர் என்பதுபோல், முந்தையத் தேர்தலில் புறக்கணித்தவரை இந்தத் தேர்தலில் புறக்கணித்தும் இந்தத் தேர்தலில் புறக்கணிப்பவரை அடுத்தத் தேர்தலில் வரவேற்றும் மாற்றத்தை வெளி்ப்படுத்தினர். இத்தகைய போக்கே இருமுதன்மைக் கட்சிகளுக்கும் திருந்திய பாதையில் நடைபோடாமல் முந்தைய குற்றப்பாதையிலேயே விரைந்து செல்லும் தன்மையை உருவாக்கியது. இதனால்தான் மக்கள் எதிர்த்தாலும் அரசே மதுவை விற்றல், தமிழ்வழிப்பள்ளிகளை மூடல்,…