மறக்க முடியுமா? : திருவாரூர் தங்கராசு – எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? – திருவாரூர் தங்கராசு “சட்டத்தை எதிர்த்த தோழர்களை எல்லாம் தேடிப்பிடித்து, அவர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். 1946இல் இந்தியாவில் மேலாட்சி(டொமினியன்) தகுதியுள்ள இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்பட்டது. அரசியல் வரையறை அவையின் தலைவராக இராசேந்திரபிரசாத்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை கூடியது. இந்த அவை , அம்பேத்துகார் தலைமையில் அரசியலமைப்புச்சட்ட வரைவுக் குழுவை அமைத்தது. டி.டி.கிருட்டிணமாச்சாரி, அல்லாடி கிருட்டிணசாமி, கோபால்சாமி…
பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு மறைந்தார்!
தன்மானத்தை உணர்த்திய தந்தை பெரியாரின் களப்பணிகளில் தளபதிகளாகச் சிலர் விளங்கியுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர்களுள் ஒருவர் திருவாரூர் தங்கராசு. முத்தமிழ் வாயிலாகக் குறிப்பாக மேடைப்பொழிவிலும் நூலுரையிலும் திரைஉரையாடலிலும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும் தன்மானத்திற்கும் தன்மதிப்பிற்கும் சார்பாகவும் பெரியாரின் கருத்துகள் குண்டுகளாக வீசப்பட்டன! பெரியாரியத்தின் கேடயங்களாக விளங்கின! ஒழுக்கக்கேடுகளுக்கு எதிராகவும் மறுமணத்திற்குச் சார்பாகவும் அவர் எழுதிய ‘இரத்தக்கண்ணீர்’ திரைப்படம் இன்றளவும் பேசும் காவியமாக விளங்குகிறது! நடிகவேள் எம்.ஆர்.இராதாவிற்குத் தனி முத்திரை பதித்த இத்திரைப்படத்தின் கதை உரையாடல் திருவாரூர் தங்கராசு அவர்கள்தாம்! பின்னரும் சில திரைப்படங்களுக்குக் கதை…