உ.வே.சா.வின் என் சரித்திரம் : 128- அத்தியாயம்-87: கவலையற்ற வாழ்க்கை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் : 127 – சிலப்பதிகார ஆராய்ச்சி – தொடர்ச்சி) என் சரித்திரம் கவலையற்ற வாழ்க்கை நான் வேலையை ஒப்புக்கொண்டபோது கும்பகோணம் கல்லூரியில் உயர்நிலைப்பள்ளி வகுப்புக்களும் இருந்தன. அவ் வகுப்புக்களுக்கு திரு தி.கோ.நாராயணசாமி பிள்ளை என்பவர் தமிழ்ப் பாடம் சொல்லி வந்தார். கல்லூரி வேலை தானாக என்னைத் தேடி வந்தாலும் அதனைப் பெறுவதற்குப் பலர் முயற்சி செய்தார்களென்ற செய்தியை நான் அறிந்த போதுதான் அவ்வேலையின் அருமை எனக்குப் புலப்பட்டது. பங்களூர்க் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாராயணசாமி பிள்ளையும், இராமாயண வெண்பாவும்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் : 127 – சிலப்பதிகார ஆராய்ச்சி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் : 126 : விடுமுறை நிகழ்ச்சிகள்-தொடர்ச்சி) என் சரித்திரம் சிலப்பதிகார ஆராய்ச்சி நான் வேலையை ஏற்றுக் கொண்ட வருடத்தில் சிலப்பதிகாரத்தில் கானல்வரி முதல் நான்கு காதைகள் பாடமாக வந்திருந்தன. அதைக் கோடை விடுமுறை முடிந்தவுடன் பாடம் சொல்ல வேண்டியவனாக இருந்தேன். “இவர் சிலப்பதிகாரத்தை எப்படிப் பாடம் சொல்லப் போகிறார்?” என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்ததாக என் காதில் பட்டது. ஆகவே அதைக் கூடிய வரையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயம் செய்து கொண்டேன். இருந்த அச்சுப் பிரதியின் உதவி…

உ.வே.சா.வின் என் சரித்திரம் : 126 :  அத்தியாயம்-86 : விடுமுறை நிகழ்ச்சிகள்

(உ.வே.சா.வின் என் சரித்திரம்  125 : அத்தியாயம்-85 : கோபால ராவின் கருணை-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-86 விடுமுறை நிகழ்ச்சிகள் திருவாவடுதுறையில் நான் இருந்த காலங்களில் அருகிலுள்ள ஊர்களில் இருந்த செல்வர்கள் வீட்டுக் கலியாணங்களுக்கு மடத்தின் பிரதிநிதியாகச் சென்று வருவேன். கலியாண தம்பதி களுக்கு வழங்கும்படி ஆதீன கர்த்தர் ஆடை முதலியன அளிப்பார். நான் அவற்றைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விட்டு வருவேன். கல்லூரிக் கோடை விடுமுறைக் காலத்தில் திருவாவடுதுறையில் நான் தங்கியிருந்தபோது இத்தகைய சந்தர்ப்பம் ஒன்று நேர்ந்தது. அந்த வருடம் மே…

உ.வே.சா.வின் என் சரித்திரம்  125 : அத்தியாயம்-85 : கோபால ராவின் கருணை

(உ.வே.சா.வின் என் சரித்திரம்  124 : எனக்கு உண்டான ஊக்கம்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-85 கோபால ராவின் கருணை திங்கட்கிழமை பாடம் சொன்னேன். செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாவது மணி எப். ஏ. இரண்டாவது வகுப்பில் நாலடியார் பாடம் நடத்தத் தொடங்கினேன். அப்போது கல்லூரியைப் பார்க்க வந்த ஓர் உத்தியோகத்தருக்கு அங்கங்கே உள்ள வகுப்புகளைக் காட்டிக் கொண்டு வந்த கோபாலராவு நான் இருந்த அறைக்குள் அவருடன் வந்தார். அவர்களைக் கண்டவுடன் எழுந்த என்னைக் கோபாலராவு கையமர்த்தி விட்டு இரண்டு நாற்காலிகளைக் கொணர்ந்து போடச் செய்து ஒன்றில்…

உ.வே.சா.வின் என் சரித்திரம்  124 : எனக்கு உண்டான ஊக்கம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம்  123 : இரண்டாவது பாடம்-தொடர்ச்சி) என் சரித்திரம்  அத்தியாயம்-84 எனக்கு உண்டான ஊக்கம்       இரண்டாம் நாள் (17-2-1880) நான் வழக்கப்படி கல்லூரிக்குச் சென்று பாடங்களை நடத்தினேன். தியாகராச செட்டியார் அன்று மூன்று மணிக்கு மேல் வந்து நான் பாடம் சொல்லுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு மேல், சீநிவாசையர் செட்டியாரிடம் வந்து, “இன்று நான்கு மணிக்கு மேல் தமிழ்ப் பாடம் எந்த வகுப்பிற்கு என்று இராயர் கேட்டார். அந்த வகுப்பிற்கு அவர் ஒரு வேளை வரலாம். சாக்கிரதையாகப்…

உ.வே.சா. வின் என் சரித்திரம் 89 : எழுத்தாணிப் பாட்டு

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 88 : இராமசாமி பிள்ளை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்- 54 : எழுத்தாணிப் பாட்டு சிதம்பரம் பிள்ளையின் கலியாணத்துக்காக என் ஆசிரியர் தம் அளவுக்கு மேற்பட்ட பணத்தைச் செலவு செய்தார். செலவிடும் போது மிகவும் உற்சாகமாகவே இருந்தது. கலியாணமானபின் சவுளிக் கடைக்காரர்களும் மளிகைக் கடைக்காரர்களும் பணத்துக்கு வந்து கேட்டபோதுதான் உலக வழக்கம்போல் அவருக்குக்கலியாணச் செலவின் அளவு தெரிந்தது. அக் கடனை எவ்வகையாகத் தீர்க்கலாமென்ற கவலை உண்டாயிற்று. பொருள் முட்டுப்பாடு வர வர அதிகமாயிற்று. இதனால் மிக்க…