திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் – வேணு குணசேகரன்
திருத்தமிழ்ப்பாவை தமிழ்த்தாயின் கட்டளை ஏற்றுத் ‘ திருத்தமிழ்ப்பாவை’ பாடினேன் கவிஞர் வேணு குணசேகரன் தமிழ்த்தாய் தைத்திங்கள் பிறக்குமுன் எமக்கொரு கட்டளை இட்டாள். அந்தக் கட்டளையை எம்மால் முதலில் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு எமது சிற்றறிவே காரணம். மார்கழியில் வைணவர்கள் திருப்பாவையையும், சைவர்கள் திருவெம்பாவையையும் ஓதி மகிழ்வதுபோலத் தமிழ்த்தாயும் தமக்கென ஒன்றைச் செய்யுமாறு பணித்திருக்கும் அந்த நுண்ணிய கட்டளையை அவளருளாலே பின்னர்ப் புரிந்து கொண்டேன். ஆயின் அது எம்மால் இயலுமா என்று கொஞ்சம்கூடச் சிந்திக்கவில்லை. மாறாகத், திருப்பாவை, திருவெம்பாவைப் பாசுரங்களைப்போல, அவள்…