வடக்கு-கிழக்கில் வாழும் தமிழனின் திறந்த மடல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து விவாதத்திற்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பச் செய்திருக்கின்றது. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால் மட்டுமே பதிவு சாத்தியம் என்றும், தான் ஒருபோதும் பதிவு செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். இதனை அவர் தனது அரசியல்தந்திரமாக நினைத்திருக்கலாம். ஆனால் அவரது இக்கருத்தை மக்கள் எந்தளவிற்கு ஏற்பார்கள் என்பதும்…