இலட்சுமி என்னும் பயணி – வாசிக்கவேண்டிய ஒரு நூல் : இரவிக்குமார்

பட்டறிவுகளைப் பேசும் அபூர்வமான பதிவு  இலட்சுமி அம்மா எழுதிய ‘இலட்சுமி என்னும் பயணி’ என்ற தன்வரலாற்று நூல் ‘மைத்திரி புத்தகங்கள்’ என்ற புதிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.  தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனின் மனைவியான இலட்சுமி அம்மாள் தான் பிறந்து வளர்ந்து படித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போனது; மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களோடு பழக்கம் ஏற்பட்டு அவசரநிலைக் காலத்தில் தோழர் பெ.மணியரசனைத் திருமணம் செய்துகொண்டது; அதன் பின்னர் தோழர் மணியரசன் இ.பொ.க. -மார். (சிபிஐ எம்) கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்து…

பேரா.அ.இராமசாமி, நூல் வெளியீடும் திறனாய்வும் – வெள்ளி விழா நிகழ்வு

  ஆவணி 02, 2046 / ஆக.19, 2015 மு.ப.11.45 – பி.ப.04.00 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)   அருகிய அயற்சொற்கள் அயல்மொழிச் சொற்களை மிகக் குறைவாகவே கையாண்டுள்ளார். அவ்வாறு அவை இடம் பெற்ற இடங்களிலும் நான்கு இடங்கள் தவிர, அனைத்து இடங்களிலும் கிரந்த எழுத்துகளை நீக்கித் தமிழ்வரிவடிவிலேயே குறிப்பிடுகிறார்.   செகத்தில் (மாங்கனி : 2. சேரன் அவையில் ..7:7) கோசமிட்டு (மாங்கனி :18. வென்றிகொள் சேரர்தான :1:4) சீவன் (மாங்கனி :38 சாகாத சித்திரங்கள் 9-1) .துட்டனும் (மாங்கனி :15 ஏடீ தலைவி:3.8) என்பன போன்று அயலெழுத்து நீக்கித்…

ஏர்வாடியாரின் நூல்கள் – பன்னிருவர் ஆய்வு

  தை 24, 2046 / பிப்.7, 2015 எல்லோருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தை 24, 2046 – 7-2-2015 அன்று சனிக்கிழமை வாணி மகாலில் ஒரு முழு நாள் நிகழ்ச்சியில் 12 அறிஞர்பெருமக்கள் என்னுடைய படைப்புகளை ஆய்வு செய்து கட்டுரை வழங்குகிறார்கள். பேராசிரியர் இரா மோகன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நண்பர்கள் அவரையோ  என்னையோ தொடர்பு கொண்டு வருகையை உறுதிசெய்து கொள்ளலாம். அந்த ஒரு நாளை எங்களோடு இனிமையாகச் செலவழியுங்கள். உங்கள் வருகையை அன்புடன் வேண்டுகிறோம். அழைப்பிதழும்…