திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை!
திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை! தில்லியில் கடந்த 23,24 ஆம் நாள்களில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் நிறைவு விழாவிலும் தன்னார்வத்துடன் பங்கேற்றார். அப்போது அவர் “பிரான்சில் 06., 07.08.2020 இல் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அரசு நிதி யுதவி செய்யும். இந்த மாநாடு முடிந்து விட்டாலும் சிறிய அளவு உதவியேனும் செய்வோம். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு…
தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்
தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! யாதுமாகி நின்றே நம்தமிழை எங்கு நிறையச் செய்வோம் சூது அலட்சிமாய், இந்து அரசு செய்யும் சூழ்ச்சி அன்றோ? மோதும் பகைமை எல்லாம் நாம் தமிழர் என்பதால் அன்றோ ? நீதி நேர்மை எல்லாம் இந்தியர் கீதை ஏட்டில் மட்டும்தானே !! இந்தி புகுத்தி விட்டார் – இவர் சூதுநிறை மதஆட்சியாலே ; மந்திகள் ஆடவிட்டார் அவரை மந்திரி என்ற பெயராலே குந்தி மைந்தர் என்பார்; இவர் கோசலை குமரென்பார் ; விந்தியமலைக்கீழேஇருக்கு நமை வேற்றுகிரக மக்களென்பார் ; இராம…
கிரண்(பேடி) – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா? – இலக்குவனார் திருவள்ளுவன்
கிரண்(பேடி) – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா? துணைக்கண்டமாகத் திகழும் இந்தியா என்பது அரசியல் யாப்பின்படி இந்திய ஒன்றியம் என்றுதான் அழைக்கப்பெற வேண்டும். பல்வேறு அரசுகளையும் தேசிய இனங்களையும் சேர்த்து உருவாக்கப்பட்ட அரசியல் நிலப்பகுதி என்பதால் இந்திய ஒன்றியம் எனப் பொருத்தமாக அமைத்து அழைத்துள்ளனர். மத்திய ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரப் பசியாலும் தேசிய இனங்களைப் புறக்கணித்து ஒற்றை இனமாகக் காட்ட முயலும் போக்காலும், இந்தியா நடைமுறையில் ஒன்றிய அரசாகச் செயல்படவில்லை. இது குறித்துத் தேசிய இனங்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா…
தமிழ்நாட்டு உழவர்கள் தில்லியில் மனிதச் சங்கிலிப் போராட்டம்!
தமிழ்நாட்டு உழவர்கள் தில்லியில் மனிதச் சங்கிலிப் போராட்டம்! காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமிழ்நாட்டு உழவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும், வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், இந்திய எரிவளி ஆணைய (GAIL) நிறுவனம் சார்பில் தமிழகத்தில் எரிவளிக் குழாய் பதிக்கும் திட்டத்தை நடுவண் அரசு தடுத்து நிறுத்த வேண்டும் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக உழவர்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தில்லியில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்குத் தலைமை…
தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!
தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்! தலைகால் புரியாமல் இருக்கும் நரேந்திரர், அகமது(பட்டேல்) முதலானவர்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்ட தில்லி வாக்காளர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆம் ஆத்மி என்னும் பாசக-காங். கலவைக் கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் பாராட்டவில்லை. அதனைத் தேர்ந்தெடுப்பது தவிர அம்மக்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், பாசக வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவே தாங்கள்தான் என மாரடித்துக் கொண்டு உலகமெல்லாம் மாயத் தோற்றத்தை அதன் தலைவர்கள் உருவாக்கியிருப்பர். நரேந்திரர் பின்னால் இந்தியா இருப்பதாகவும் அதன் தலைவர் அகமது வினைத் திறம் வெற்றி கண்டதாகவும் கூறுவதுடன்…
தில்லியின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் அரவிந்து கெசுரிவால்
தில்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்து கெசுரிவால் இராம்லீலா திடலில் 28.12.13 அன்று நண்பகல் 11.58 மணிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கே கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில், தில்லி துணை நிலை ஆளுநரால், கெசுரிவால் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார். இவரைத் தொடர்ந்து சட்ட மன்றத் தேர்த்லில் வெற்றி பெற்ற பிறர் தில்லிச் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். அமைச்சுப் பொறுப்புகள் நிதித்துறை, மின்துறை ஆகியவற்றை முதல்வர் கெசுரிவால் வைத்துக் கொண்டுள்ளார். சோம்நாத் பாரதிக்குச் சட்டம்-சுற்றுலாத் துறையும், கிரிசு சோனிக்கு வளர்ச்சி, வேலைவாய்ப்பு,…