அப்பா வேண்டுமா? இலவசங்கள் வேண்டுமா? – தங்கர்பச்சான்
அப்பா வேண்டுமா? இலவசங்கள் வேண்டுமா? – தங்கர்பச்சான் அப்பாதான் வேண்டும் – சிறார் ஊரைவிட்டுத் துரத்துவதற்காகவும், பிரிப்பதற்காகவுமே பள்ளிக்கூடங்கள். அதைச் சிறப்பாகச் செய்து தருவதுதான் சிறந்த பள்ளி. உடன் பயின்றவர்களைப் பின்னாளில் காணாமலே போக நேரிடுகிறது. நடுவில் சேர்ந்துகொண்டவர்களோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியைத் திருப்பித் தருவதற்குக் கடந்துபோன பள்ளி நாட்களாலும் இழந்த காதலி, காதலனாலும் மட்டுமே முடியும். ‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்துக்குப் பின் ஏராளமான பள்ளிகளுக்கு நான் செல்ல நேர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டும், ஒரே ஆண்டில் 60 பள்ளி, கல்லூரிகளுக்குச்…
அடங்கா வெறி! – தங்கர்பச்சான்
எங்கே போகிறது மன்பதை? பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. பண்பாட்டில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும் பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள் தலையிலேயே விழும். செய்தித்தாள்களில் நாள்தோறும் தவறாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல் குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில் கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை எதிர்காலத்தில் எங்கே போய்க் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை. நகரம், சிற்றூர் என்றில்லாமல் தொடரும் இந்தக் கொடுஞ்செயல்கள்,…