பொறி. தி.ஈழக்கதிர் – இவன் பெற்றோர் என்நோற்றார் என வியக்க வைத்துள்ளவன்!
பொறி. தி.ஈழக்கதிர் நூறு நூறு ஆண்டுகள் வாழ்கவே! ஆடி 27, 2046 / ஆக12, 2015 அன்று பிறந்தநாள் பெருமங்கலம் காணும் எங்கள் மகன் தி.ஈழக்கதிர் நல்ல மனைவிமக்கள் பெற்று இல்லறத்தை நல்லறமாக்கி, நலம், வளம் நிறைந்து, தமிழ்நலம் பேணி நூறாண்டிற்கும் மேல்வாழ உள்ளன்புடன் வாழ்த்துகிறோம்! ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் பிள்ளைகள் பற்றிய நினைவு மிகுதியாக இருக்கும். அத்தகைய நினைவுகளில் சிலவற்றை அன்பு மகனின் பிறந்தநாளில் பகிர விரும்புகின்றேன். அப்பொழுது சென்னை அண்ணா நகரில் திருவேணி குடியிருப்பில் குடியிருந்தோம். மிக அருகிலுள்ள…