தி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்! திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள (12.08.2049/28.08.2018) தாலினுக்கும் பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள துரை முருகனுக்கும் வாழ்த்துகள். துரை முருகன் நகைச்சுவையாகப் பேசுபவர். எனவே, யாரையும் கசக்கிப் பிழியாமல் தன் பேச்சு மூலமே பொருளைத் திரட்டுவார் என எதிர்பார்க்கலாம். இதேபோல் நிகழ்ச்சிகள் நடத்தும்பொழுது பொதுமக்களிடம் பணம் பறிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம். பன்முகத் திறமை கொண்ட கலைஞர் மு.கருணாநிதிக்குப் பின்னர் மு.க.தாலின், திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். கட்சியைப் பிளவிலிருந்து காப்பாற்றல், தேர்தல்களில் வெற்றிகளை ஈட்டச் செய்தல், அதற்காகக் கூட்டணிகளைச்…