சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கில் அரசு முனைப்புடன் வாதாட வேண்டும் : கலைஞர்
தமிழருக்கே உரிய சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு பணியாட்சியின்(நிருவாகத்தின்) கீழ்க் கொண்டு வந்து பணியாள்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசு மூத்த வழக்குரைஞரை நியமித்து, முனைப்புடன் வாதாட வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு நியமித்த அதிகாரிபணியாண்மைபுரிய உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் வாதாடி…