தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள் – மறைமலையடிகள்
தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள்! திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற்கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூல் அன்று, ‘தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு’ என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள். தீங்கனியாகிய ஒரு மாம்பழத்தைப் பிழிந்தால் எவ்வளவு சாறு தேறும்? தேறும் சிறு அளவிற்றாய சாற்றினைச் சுண்டக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துத் துண்டாக்கினால் ஒக்க, திரண்ட காப்பியங்களையெல்லாம் பிழிந்து வடித்துக் காய்ச்சித் திரட்டி தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள். –…