மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 78
(குறிஞ்சி மலர் 77 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 27 தொடர்ச்சி “உங்களுடைய உடம்புக்கு என்ன?” “உடம்பெல்லாம் நன்றாக இருக்கிறது. மனத்துக்குத் தான் எல்லா இழவும்.” அவருடைய குரலில் இருந்த கடுமையான வறட்சியைக் கண்டு மேலே எதுவும் பேசத் தோன்றாமல் தயங்கி நின்றான் அரவிந்தன். கோபமோ, கவலையோ அதிகமாகி உணர்ச்சி வசப்பட்டால் இரத்தக்கொதிப்பு (பிளட்பிரசர்) வந்துவிடும் அவருக்கு. “எல்லாப் பயல்களும் சமயம் பார்த்துத்தான் காலை வாரி விடுகிறார்கள். குனிந்து கொள்ளச் சொல்லிப் பச்சைக் குதிரை தாவி விட்டுக் குப்புறத் தள்ளியும் விடுகிறார்கள். தேர்தல் செலவுகளுக்காக…