தக்கவர் சசிகலாவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தக்கவர் சசிகலாவே! ? அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக யார் வரவேண்டும் என்பது அக்கட்சி சார்ந்தது. இதுகுறித்துப் பிறர் கருத்து தெரிவிக்கலாமா? ஆமாம். ஒரு கட்சியின் உட்கட்சி வேலைகுறித்துப் பிறர் கவலைப்படத் தேவையில்லைதான். ஆனால், அஇஅதிமுக ஆளுங்கட்சி. ஆளுங்கட்சியின் முடிவு அரசையும் கட்டுப்படுத்தும். எனவே, அக்கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். அவ்வாறு தெரிவிக்கும் பொழுது பலரும் வேண்டுமென்றே திரித்துப் பொய்யைப் பரப்புவதால் நாமும் நம் கருத்துகளைத்தெரிவிக்கலாம். ? ஆனால், அக்கட்சியில் ஒரு பகுதியினரும் அக்கட்சி சாராதவர்களில் பெரும்பகுதியினரும் சசிகலா பொதுச்செயலாளர் ஆகக்கூடாது என்றுதானே…