தமிழ்நெறிக்காவலர் அறவாணர் நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நெறிக்காவலர் அறவாணர் நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்! தமிழ்ப்பகைவர்களே! வெளியேறுங்கள்! தாய்மொழியில் இறைவனை வணங்குபவர்களுக்குத்தான் இறையருள் முழுமையாகக் கிட்டும். தமிழர்கள் பிற மொழியில் தம் சார்பாக யாரோ கடவுளை வாழ்த்த, அதைப்புரியாமல் செவிகொடுத்துக் கேட்டுத் தீவினை புரிந்து வருகின்றனர். எனவேதான், இறையருள் இல்லாமல் இன்னலுற்று வருகின்றனர். இறைவனைத் தமிழில் வணங்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்ப்பாடல்களைப் பாடி இறைநெறி பரப்பியவர்களுள் ஒருவர் நம்பியாரூரன்; சுந்தரமூர்த்தி நாயனார் என்று அழைக்கப் பெறுகிறார். திருமுனைப்பாடியில் திருநாவலூர் எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாரூரன் சிவபெருமானைப்பற்றி 38,000…
ச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்! கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு.(திருவள்ளுவர், திருக்குறள் 578) தீர்ப்பு என்பது வழக்கின் தன்மையைமட்டும் கருதி வழங்கப்படுவதில்லை. நேர்வுகளுக்கேற்ப, வழக்காளிகளின் செல்வாக்கு, வழக்கின் பரபரப்புத் தன்மை, நீதிபதியின் பார்வை, வழக்குரைஞர்களின் வாதத்திறமை, வழக்கு நீட்டித்து ஆனால் சட்டென்று உடனே தீர்ப்பு சொல்ல வேண்டிய காலச்சூழல், அரசியல் மேலாதிக்கம் முதலியவற்றின் அடிப்படையிலேயே பல தீர்ப்புகள் அமைகின்றன. பணிச்சுமைகளில், வழக்குரைஞர் அல்லது வேறு யாராலோ தெரிவித்துத் தட்டச்சிடப்படுவதே தீர்ப்பாக வந்துள்ளதாகவும் சில சமயங்களில் கூறியுள்ளனர். சில நல்ல தீர்ப்புகளுக்கு…
11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே! – இலக்குவனார் திருவள்ளுவன்
11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே! தமிழ்நாட்டிற்கான சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(27.04.2018) இரு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கிப் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஒன்று, சட்டமன்றத்தில் மேனாள் முதல்வர் செயலலிதா படத்தை வைக்கும் பேரவைத் தலைவரின் முடிவில் தலையிட முடியாது என்பது. நீதிமன்றத்தின்படி குற்றவாளியாக அவர் இருந்தாலும் முதல்வராகச் செயல்பட்டவர் என்ற முறையில் அவர் படம் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால், இவ்வழக்கு தொடுத்த பொழுதே இவ்வழக்கு உயர்நீதிமன்ற வரம்பிற்குள் வராது என மறுத்து வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கலாமே! மற்றொன்று தமிழகத் தலைவிதியை…
காவிரி வழக்கு: நீதி வழங்கவில்லை என்றால் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! – பெ. மணியரசன்
காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! உச்ச நீதிமன்றத்தில் ஐப்பசி 02,2047 / 18.10.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடக் கூடாது என்றும், நாடாளுமன்றம்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது என்றும் இந்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த வாதங்கள், தமிழ்நாட்டுக்குக் காவிரி…
தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்
தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு தமிழுக்குக் குரல் கொடுக்கும் காந்தி தனித்து விடப்படலாமா? உலகில் உயர்தனிச்செம்மொழி என்பது தமிழ் மட்டும்தான்! தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பு வழங்கியதுடன் அதற்கு முன்னர், அதிகார ஆணையின்றியே அரசின் சலுகைகளைத் துய்த்து வந்த சமற்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதியேற்பை இந்திய அரசு அளித்தது. விழா நிகழ்ச்சிகளில் இனிப்பு வழங்கினால், “எனக்கு எனக்கு” என்று குழந்தைகள் ஆளாளுக்குக் கை நீட்டுவதுபோல் பிற மொழியினர் கை நீட்டியுள்ளனர். செம்மொழித் தகுதியேற்பு என்பது சிறுவர் சிறுமியருக்கு இனிப்பு வழங்குவது…
சான்சன் & சான்சன் உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு!
சான்சன் & சான்சன் (Johnson & Johnson) நிறுவனப் பொருளால் புற்றுநோய் தாக்கிப் பெண் உயிரிழப்பு! உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு! அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் வாழ்ந்த சாக்குலின் பாக்சு (Jacqueline Fox) என்ற பெண் 35 ஆண்டுக் காலமாக சான்சன் சான்சன் நிறுவனத்தின் முகமாவு (Talcum powder) முதலான பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கருப்பைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு அக்தோபர் மாதம் தனது 62ஆவது அகவையில்…
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்! – வைகோ
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்! – வைகோ இராசீவுகாந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். சனிக்கிழமை, இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இராசீவுகாந்தி கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முதலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வில் நடைபெற்றது. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், மரணத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர்த் தண்டனை குறைக்கப்பட்ட…
எழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்!
அப்பாவிகள் எழுவரும் அவர்கள் குடும்பத்தினரும் தமிழ்ச்சுற்றத்தினரும் மனிதநேயர்களும் மகிழ வேண்டிய வாய்ப்பு பறிபோய்விட்டது! பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு ஒன்று பொல்லாச் செய்தியாக மாறி விட்டது. ஏனிந்த அவலம்? யாரிதற்குப் பின்னணி? சதியாளர்கள் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை. என்றாலும் இதுபோன்ற இன எதிர்ப்புக் குரல்களும் அதனை இனப்பற்றுள்ளவர் என்ற நம்பிக்கைக்கு ஆளானவர்களே எதிரொலிப்பதும் தமிழினத்திற்கே உரியன போலும்! ஆட்சியில் இருந்தால் ‘இந்தியனா’கவும் இல்லாவிட்டால் ‘தமிழனா’கவும் நடந்து கொள்ளும் முதுபெரும் தலைவர், ஆட்சியில் இல்லாத பொழுதும் ‘இந்தியனா’க நடந்து…
விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உரோம்: இத்தாலியில் கடந்த 2008– ஆம் ஆண்டு தமிழ்ச் தேசிய செயல் வீரர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டி வழங்கினர். இது பன்னாட்டுப் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது எனத் தமிழ்த் தேசிய செயல்வீரர்கள் தளையிடப்பட்டனர். அவர்கள் மீது கடந்த 2010–ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என கடந்த 2011–ஆம் ஆண்டில் இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தின் மூலம் மருத்துவம்,…
நடராசர் கோயில் தீர்ப்புக்கு அரசின் பொறுப்பின்மையே காரணம் : கருணாநிதி
சிதம்பர நடராசர் கோயில் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு தமிழக அரசின் கவனமின்மையே காரணம் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராசர் கோயிலைப் பொது தீட்சிதர்களே நிருவகிக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்தக் கோவில் நிருவாகத்தைத் தமிழக அரசு ஏற்று நடத்தலாம் என்று சென்னை உயர் நீதி மன்றம் ஏற்கெனவே இசைவு அளித்துப் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதி மன்றம் தற்போது நீக்கியுள்ளது. அ.தி.மு.க. அரசு…