தீவாக்கிய அலைபேசி – கருமலைத்தமிழாழன்
தீவாக்கிய அலைபேசி செல்லிடக்கை அலைபேசி என்றே இன்று செப்புகின்ற அறிவியலின் பேசி யாலே இல்லத்தில் இருந்தபடி உலகில் எங்கோ இருப்பவரைத் தொடர்புகொண்டு பேசு கின்றோம் செல்கின்ற இடத்திருந்தே வீட்டா ரோடு செய்திகளைப் பரிமாறி மகிழு கின்றோம் எல்லைகளை நாடுகளைக் கடந்தி ருந்தும் எதிர்நின்று பேசுதல்போல் பேசு கின்றோம் ! எழுத்தாலே அனுப்பிவைத்த செய்தி தம்மை ஏற்றவகை படங்களொடு அனுப்ப லானோம் கழுத்துவலி எடுக்கமேசை முன்ன மர்ந்து கணிணியிலே செய்கின்ற பணியை யெல்லாம் அழுத்திவிரல் படுத்தபடி சாய்ந்த மர்ந்தும் அடுத்தஊர்க்குச் செலும்போதும் செய்ய லானோம் பழுதின்றி …