(அதிகாரம் 020. பயன் இல சொல்லாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால்   02. இல்லற இயல் அதிகாரம் 021. தீ வினை அச்சம் தீயைப் போன்று சுட்[டு]அழிக்கும் தீய செயல்களுக்கு அஞ்சுதல்.    201. தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர், தீவினை என்னும் செருக்கு. தீயோர், தீச்செயல்களுக்கு அஞ்சார்; தூயோர் அவற்றிற்கு அஞ்சுவார்.  202. தீயவை, தீய பயத்தலால், தீயவை, தீயினும் அஞ்சப் படும். தீயைவிடத், தீமைதரும் தீய செயல்களைச் செய்தற்கு, அஞ்சுக.  203. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப, தீய, செறுவார்க்கும் செய்யா விடல்….