முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ
முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ விலையுயர்ந்த மரங்கள் சேதம் தேவதானப்பட்டி அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் கருகின. முருகமலை வனப்பகுதியில் உணவகங்கள், அடுமனைகள்(பேக்கரிகள்), ஓய்வுமனைகள் ஆகியவற்றுக்கு அடுப்பு எரிப்பதற்கு மரங்களை வெட்டிக் கடத்தி வருகின்றனர். இவ்வாறு மரங்கள் வெட்டியபின்னர் வெட்டிய மரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக அப்பகுதியில் வளர்ந்து வரும் கோரைப்புற்களின் மீது தீயை வைத்து விடுகின்றனர். இவ்வாறு தீ வைப்பதாலும் தற்பொழுது கோடை வெயில் உக்கிரமாக இருப்பதாலும் இந்தத் தீ…