தமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் தொன்மையான, சிறப்பான வரலாற்றுக்கு உரியவர்களாக இருந்தும் அவ்வரலாற்றை அறியாதவர்களாக வாழ்ந்து மடிவோர் யாரெனில் உலகிலேயே தமிழ் மக்களாக மட்டும்தான் இருக்க முடியும். நம் வரலாறு குறித்த அறிந்துணர்வு இல்லாததால்தான், மக்கள் நலன் குறித்த விழிப்புணர்வே நம் நாட்டவரிடம் இல்லை. நம் பாடங்களும் நம் வரலாறு தெரியாதவர்களாகவே நம்மை உருவாக்குகின்றன. எனவே, இப்பாடங்களின் அடிப்படையில் தேர்வுகள் எழுதி உயர் பொறுப்புகளுக்கு வருபவர்களுக்கும் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு, முதலான…