செஞ்சீனா சென்றுவந்தேன் 16 – பொறி.க.அருணபாரதி
(புரட்டாசி 19, 2045 / 05 அக்தோபர் 2014 இன் தொடர்ச்சி) 16. பொறாமைப்படத்தக்க இரு நிகழ்வுகள் அன்றொரு ஞாயிற்றுக்கிழமை, சீன மக்கள் மீது ஆர்வமும் பொறாமையும் ஏற்படும் அளவிற்கு இரண்டு நிகழ்வுகள் கண்டேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலையில் சற்றுக் காலத்தாழ்ச்சியாக எழுந்திருந்தேன். என் அறைக்கு ஒரு பெண், கையில் ஒரு பெட்டியுடன், நவநாகரிக உடையணிந்து கொண்டு வந்திருந்தார். பார்ப்பதற்கு, நான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் மகள் போல் இருந்தாள். என்னைப் பார்த்ததும், “நீ ஃகௌ” (NI HAO…