பேரினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்
இறுதிக்கடன் என்பதன் மூலம் நாம் இறந்தவர்க்கு நம் மதிப்பையும் வணக்கத்தையும் செலுத்துகிறோம். இறந்தவர் நினைவைப் போற்றுவதற்கு நாம் நினைவேந்தல் என்கிறோம். இயற்கையாகவோ நோய்வாய்ப்பட்டோ எதிர்பாரா நேர்ச்சி போன்றவற்றாலோ இறக்கும் பொழுது இவ்வாறு நினைவேந்தலாக நிகழ்த்துவது சரியே! போராளியாக வீர மரணம் அடையும் பொழுது நினைவேந்தலை வீர வணக்கம் செலுத்தும் வகையில் கடைப்பிடித்தலே இறந்தவர்க்கு நாம் அளிக்கும் மதிப்பாகும்! கொலை செய்யப்பட்டு இறக்கும் பொழுது, நினைவேந்தல் நடத்தினாலும் – ‘பல்லுக்குப் பல்’ என்பதுபோல் பழிவாங்குவது தவறு என்றாலும் – பழிவாங்கும் எண்ணமே…