துயரீட்டுப்பணிகளில் சென்னை மாநகராட்சி
துயரீட்டுப்பணிகளில் சென்னை மாநகராட்சி சென்னையில் துப்புரவுப் பணிகளை தீவிரப்படுத்தக் கூடுதலாக 1,139 துப்புரவுப் பணியாளர்கள் பிற மாநகராட்சி, நகராட்சிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில், துப்புரவுப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 500 பேர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியைத் தீவிரப்படுத்தும்…