தமிழ்இணையம் 2023’ – ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக  மொழியியல் துறை,தமிழ் இணையக் கழகம், இந்தியா, தமிழ் அறித நுட்பியல் உலகாயம்(இலங்கை) தமிழ் இதழ், கனடாஇணைந்து  நடத்தும்  ‘தமிழ் இணையம் 2023’ ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் அட்டோபர் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி: indiatia2020@gmail.com கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 01.10.23 5 முதல் 8 பக்க அளவில் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் 3 கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பெறும். பிற விவரங்களை இப்பக்கத்தில் உள்ள விவர இதழில் காண்க….

“ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரையரங்கம், திருச்சிராப்பள்ளி

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, நவலூர்குட்டுப்பட்டு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு. எதிர்வரும் மாசி 15, 2048 _ 27/02/2017 அன்று  தமிழ்த்துறையில் “ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெறுகிறது. சிறப்புச் சொற்பொழிவாளர்: திருமதி மதிவதினி. சுவிட்சர்லாந்து

அலைபேசிக்கணிமை 2016 – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு

அன்புள்ள உத்தமம் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தை 22 & 23, 2047 / பிப் 5 & 6, 2016  ஆகிய  இருநாளும் உத்தமம் இந்தியக்கிளையின் சார்பாக செல்பேசிக் கணிமை 2016. – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு – கருத்துரை வழங்கும் நிகழ்வு தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளதால் அனைத்து உத்தமம் உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.   செல்பேசிக் கணிமை 2016 குறுஞ்செயலி மாநாடு நிச்சயமாக அனைத்துப் பேராசிரியர்கள் – தமிழ்க் கணியன்கள்(மென்பொருள்) உருவாக்குநர்களுக்குப் பேரளவில் உதவியாக இருக்கும்.  தமிழில் கணியன்கள்(மென்பொருள்கள்) உருவாக்கினால் நிதி…

தமிழ்க்கணினி : பன்னாட்டுக் கருத்தரங்கம்

    திருச்சிராப்பள்ளியில், பாரதிதாசன் பல்கலைக்கழக கலை-அறிவியல் கல்லூரியில்(நவலூர் குட்டப்பட்டு) தமிழ்த்துறையின் சார்பாக தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்  இருநாள் நடைபெற்றது. முதல் நாளான 27-03-2014 அன்று காலையில் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர்(பொ.) முனைவர் உண்ணாமலை வரவேற்புரையாற்றினார். பாரதிதாசன்  பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் சுப்பையா தலைமை தாங்கினார்.  பாரதிதாசன் பல்கலைககழகப் பதிவாளர் முனைவர் இராம்கணேசு முன்னிலையுரையாற்றினார். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன் மையப்பொருளுரையாற்றினார்.  தமிழ்நாடு  தேசியச் சட்டப்பள்ளி துணைவேந்தர் முனைவர் ந.முருகவேல் வாழ்த்துரை வழங்கினார். …

பன்னாட்டுக் கருத்தரங்கம்-தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள்

  அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு வணக்கம்.   தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்ச்சு 27,28 – 2014 அன்று திருச்சிராப்பள்ளியில் எமது கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கணினி தொழில்நுட்ப அறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன. இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன். தொடர்பிற்கு முனைவர் துரை.மணிகண்டன் அலைபேசி எண்: 9486265886 http://www.manikandanvanathi.blogspot.in/2014/01/blog-post.html