வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:3. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து (48) ஆற்றின் ஒழுக்கி=நல்நெறியில் பிறரை ஒழுகச் செய்து அறன் இழுக்கா=அறநெறியினின்று மாறுபடாத, இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, நோற்பாரின்=தவம் செய்வாரின் வாழ்க்கையைவிட, நோன்மை யுடையத்து=தாங்கும் தன்மை மிகுதியும் உடையது. இல்லற நெறியை மேற்கொண்டு மனையாளொடு வாழ்கின்றவர் பெரியவரா? இல்லறத்தை வெறுத்துத்…
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 3.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:2. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (திருக்குறள் 45) இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, அன்பும்=அன்பையும், அறன்=அறனையும், உடைத்தாயின்= பெற்றிருக்குமாயின், பண்பும்=இல் வாழ்க்கைக்குரிய பண்பும், பயனும்=பயனுடைமையும், அது=அங்ஙனம் பெற்றிருத்தலாகும். அன்பு பரிமேலழகர், “தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பினை…