தமிழ்ப்புலமை பெறுங்கள்! அல்லது தமிழ்ப்புலமையாளரை மதியுங்கள்!
பிற துறை தமிழன்பர்களே! தமிழ்ப்புலமை பெறுங்கள்! அல்லது தமிழ்ப்புலமையாளரை மதியுங்கள்! “தொண்டு செய்வாய் தமிழுக்கு! துறைதோறும், துறைதோறும் துடித்தெழுந்தே!” எனப் பாவேந்தர் வேண்டியவாறு பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் தொண்டாற்றி வருகின்றனர். தாங்கள் சார்ந்த துறைகளில் தமிழ்ப்பயன்பாடு பெருகவும் உழைத்து வருகின்றனர். எனினும் இத்தகையோருள் பெரும்பான்மையர் தங்களின் தமிழார்வமும் தங்கள் தமிழ்த் தொண்டும் தங்களின் தமிழ்ப்புலமைக்கு அளவுகோல் எனத் தவறாகக் கருதுகின்றனர். கற்றது கைம்மண் அளவு என்பதை மறந்து விட்டுத் தங்களுக்குத் தெரிந்த அளவு தமிழையே உயர்ந்த அளவாகக் கருதிவிடுகின்றனர். எனவே, சொல்லாக்கங்கள், தமிழ்…