தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!
(தோழர் தியாகு எழுதுகிறார் : நினைவுச்சுடர் வழிகாட்டும் ஒளிவிளக்கம்!- தொடர்ச்சி) இனக் கொலைக் குற்றவாளிக்கு இனிய வரவேற்பு:ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு! ‘மாவீரர்நாள் உரை’ நிகழ்த்த அரிதாரம் பூசி வந்த பொய்த் துவாரகைக்குக் கட்டியம் பாடிய காசி ஆனந்தனார் பேசிய வசனத்தை மறந்திருக்க மாட்டீர்கள்: “இந்திய அரசின் துணையோடு துவாரகை அரசியலில் களமாடப் போகிறார்.” ‘துவாரகை’ நாடகத்தில் விரைவாகவே திரை விழுந்து விட்டதால் சூத்திரதாரிகள் இப்போது பிரகடனக் காய்களை உருட்டத் தொடங்கியுள்ளார்கள். முதலாவதாக ‘நான்கு தூண் கொள்கை’ப் புகழ் சிடிஎஃப் சுரேன்…