திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 16 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 16 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 383) ஆளும் தலைவருக்குக் காலந்தாழ்த்தாத தன்மையும் கல்வியுடைமையும் துணிவுடைமையும் நீங்காமல் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். தூங்காமை என்றால் உறங்காமை என்னும் பொருள் பின்னர் ஏற்பட்டது. காலந்தாழ்த்தாமை என்றுதான் பொருள். “தூங்காதே…