பனுவல் வரலாற்றுப் பயணம் 7 : தூசி – மாமண்டூர்
பனுவல் வரலாற்றுப் பயணம் 7 : தூசி – மாமண்டூர் தூசி, மாமண்டூர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், காஞ்சிபுரம் அருகே உள்ளது. தூசி என்றால் குதிரை படை நிறுத்துமிடம் என்பது பொருள். இவ்வூரில் உள்ள மலை அடிவாரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவருமன் காலக் குடைவரைக்கோயிலும் அவன் பெயரிலேயே அமைக்கப்பட்ட சித்திரமேகத் தடாகம் என்ற மிகப்பெரிய ஏரியும் அமைந்திருக்கின்றன. அக்கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் பெரியது. இம்மலைமேல் சமண முனிவர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தலமும் அதில் தமிழ்ப் பிராமி கல்வெட்டும்…