ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (1.) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) 2.தமிழ் முழக்கம் என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல் இறுதி எனக்கு வாராது; என்மொழி உலகாள வைக்காமல் என்றன் உயிரோ போகாது’ என்ற வேகமும் தாகமும் கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ சேதுராமன். தமிழ் மொழியிடம் அளவிலா அன்பும் பற்றும்(பக்தியும்) ஈடுபாடும் கொண்டுள்ள கவிஞர், தமிழை அன்னையாக உள்ளத்தில் நிலைநிறுத்திப் போற்றி வணங்குகிறார். தனக்கு ஆற்றலும் துணிவும் செயலூக்கமும் தந்து தன்னை வளர்க்கும் தாய், தமிழ்தான் என்று பாடித் துதிப்பதில் அவருக்கு அலுப்பு…