அரிக்கேன் வெட்சு அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா
அரிக்கேன் வெட்சு அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா “தொண்டு மனப்பான்மை இருந்தால் புற்றுநோயையும் எதிர்த்துப்போராடி வாழமுடியும்!’’ சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் (1988) ஒன்று சேர்ந்து உருவாக்கி இருக்கும் தொண்டு நிறுவனம் அரிக்கேன் வெட்சு என்ற நிறுவனம். இதன் மூன்றாவது ஆண்டு விழா ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை, 27-10-2018 அன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன், பல்கலைக்கழகப் பதிவாளர் தென்சிங்கு ஞானராசு ஆகியோருடன் கவிஞர் அ.வெண்ணிலா, கில்ட் ஆப்…