பாடம் புகட்டிய மக்கள்! – பாடம் கற்றதா நடிகர் சங்கம்? – இலக்குவனார் திருவள்ளுவன்

பாடம் புகட்டிய மக்கள்! – பாடம் கற்றதா நடிகர் சங்கம்?   தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மட்டைப் பந்தாட்டம் இன்று(சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016) நடந்து முடிந்துள்ளது. விளையாட்டைப் பரப்புவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் உண்மையில் பாராட்டத்தக்கன. 1 வாரம் முன்னதாகவே கலைநிகழ்ச்சிகள் மூலம் விளம்பரப்படுத்தியதும் விழா நாளன்று கலைநிகழ்ச்சிகள் நடத்தியதும், பிற மாநிலக் கலைஞர்களைத் திருமணத்திற்கு அழைப்பதுபோல் சந்தித்துத் துணிமணிகள், வெற்றிலை, பாக்கு மதிப்புடன் அழைத்ததும் என நன்றாகவே திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் அடிப்படையே ஆட்டம் கண்டதால் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை….

நக்கீரனுக்கு நன்றி!

நக்கீரனுக்கு நன்றி!  அரசியல் செய்திகளுடன்  தமிழுணர்வு செய்திகளையும் வெளியிடும் இதழ்களில் நக்கீரனும் ஒன்று.   தமிழ்க்காப்புக்கழகம்,  தென்னிந்திய நடிகர்சங்கத்தின் மட்டையாட்டத்திற்கான அணிகளின் பெயர்களைத் தமிழில்  சூட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.  இதனைப் பாரறியும் வண்ணம் தொகுதி 28, எய் 109 நாள்  சித்திரை 3- 5/ ஏப்.16-18 இதழில்வெளியிட்டுள்ளது நக்கீரன். அதற்கு நாம் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் மட்டையாட்ட அணிகளின் பெயர்களுக்கு எதிர்ப்பு! பொருட்படுத்தாத நடிகர் சங்கம்! (வந்த செய்தி) உறுதிப்படுத்தப்பட்ட உண்மை: நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு 26 கோடி…

நட்சத்திர மட்டையாட்டம் நடக்கட்டும்! ஆனால்……. – இலக்குவனார் திருவள்ளுவன்

நட்சத்திர மட்டையாட்டம் நடக்கட்டும்! ஆனால்…….   பொதுமக்களின் சிக்கல்கள், துயரங்கள் களைய  நடிகர் சங்கம் குரல் கொடுக்காது என்று அறிவித்த நடிகர் சங்கம், இன்று தன் வளர்ச்சிக்காகப்  பொதுமக்களிடம் கையேந்தியுள்ளது.  வரும் சித்திரை 04, 2017 / ஏப்பிரல் 17, 2016 அன்று சென்னையில் சேப்பாக்க விளையாட்டரங்கத்தில் நடிகர் சங்க வளரச்சிக்காக நட்சத்திர மட்டைப்பந்தாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள்.   பங்கேற்கும்  திரைக்கலைஞர்கள் யாரும் மிகப்பெரிய ஆட்டக்காரர்கள் என்று சொல்ல முடியாது. ஆட்டத்தைத் தெரிந்தவர்கள் என்ற நிலையில் ஒரு பகுதியினரும் பெயரளவிற்கு ஆடுவோர் என ஒரு…

நடிகர் சங்கத்தின் நடிப்பும் அறிவுக் கொள்முதலும்

நடிகர் சங்கத்தின் நடிப்பும் அறிவுக் கொள்முதலும்   தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றுப் புதியப் பொறுப்பாளர்கள் பதவி ஏற்றுள்ளனர். கலைக்குடும்பத்தினர் நலனுக்கும் கலைத்துறையின் மேம்பாட்டிற்கும் ஒல்லும்வகைத் தொண்டாற்றிட வேண்டி அவர்களை வாழ்த்துகிறோம். எனினும் தாங்கள் வாகை சூடியதன் காரணம் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.  பெருமளவு பரபரப்பாக ஊடகங்களில் இடம் பெற்ற இத் தேர்தலில் இளைஞர்கள் வென்றதாகக் கூற இயலாது. ஏனெனில் வீழ்ந்த அணிணியிலும் இளைஞர்கள் இருக்கின்றனர். கலைக்குடும்பத்தினருக்கு உதவாமையால் முந்தைய அணி தோற்றது எனக் கூற இயலாது. ஏனெனில்,…