6 எழுத்தாளர்களுக்குப் புத்தகப்பதிப்பாளர்கள் சங்கத்தின் கலைஞர் பொற்கிழி விருது எழுத்தாளர் இராசேந்திர சோழன், கவிஞர் அபி, எழுத்தாளர் எசு.இராமகிருட்டிணன், தமிழ்ப் புதுமை நாடக இயக்குநர் வெளி இரங்கராசன் ஆகியோருக்குக் கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி உரூபாயை தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் – பதிப்பாளர்கள் சங்கம்(பபாசி), அமைப்பிற்கு வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும் ஓர் ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் ஓர் இலட்சம் உரூபாய் வீதம் பொற்கிழியும்,…