புலம்பெயர்ந்தோர் எழுத்துலக ஆய்வு மாநாடு, ஈரோடு

கார்த்திகை 20 & 21 . 2048  / புதன் & வியாழன் 6 & 7 .12.2017 ஈரோடு கலை அறிவியல் கல்லூரி,   புலம்பெயர்ந்தோர் எழுத்துலக ஆய்வு மாநாடு, ஈரோடு   மாநாட்டின் ஒரு பகுதியாகச் சீவகுமாரனின் 10 நூல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அளிக்கப்பெற்று அவற்றின் அதன் மீது கலந்துரையாடலும் நிகழும். ஈரோடு கலை- அறிவியல் கல்லூரியினர் தங்குமிட வசதியையும் செய்து தருகின்றார்கள். கலந்து கொள்ள முடிந்தவர்கள் கலந்து கொள்ளவும், பார்வையாளர்கள் ஆகவும் – பங்களிப்புச் செய்பவர்களாகவும். அன்புடன் வி. சீவகுமாரன்,…

சீராட்டும் என் தமிழ் மொழி! – வேதா

அன்புப் பெற்றோர் ஆசையாய்க் குலவி என்பிலும் உறைய ஊற்றிய மொழி என் தமிழ் மொழி மனத்தில் தேன் பாய்ச்சும் தினம்தினமாய். திக்குத் தெரியாத காட்டிலும் மனம் பக்குப் பக்கென அடித்த போதும் பக்க பலமாய் மரக்கலமாய் நான் சிக்கெனப் பிடிக்கும் என் தமிழ் மொழி. பிற மொழிக் கடலில் நான் நிற பேதம், பல பேதத்தில் புரளும் திறனற்ற பொழுதிலும் என் தமிழ் பிறர் உதட்டில் தவழ்ந்தால் மனமுரமாகும். கைகாட்டி, நீர்த் தெப்பம், வாழ்வின் வழிகாட்டி என்று என்னை நிதம்; தாலாட்டி மகிழ்வில் நாளும்…

தென்மார்க்கில் “மெல்லத் தமிழ் இனி” : கலைவிழா

புரட்டாசி 26, 2046 / 10-10-2015 சனி மாலை 3 மணி   தென்மார்க்கில் புரட்டாசி 26, 2046 / 10-10-2015 சனி மாலை 3 மணிக்குத் தொடங்கும் “மெல்லத் தமிழ் இனி” என்பதனை மையமாகக் கொண்ட மாபெரும் கலைவிழாவில் ஞானசேகரன் இணையர் தலைமை விருந்தினர்கள் ஆகவும் பேராசிரியர் திரு. கோபன் மகாதேவா (4 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு ஒருங்கிணைப்பாளர், தற்பொழுது வதியிடம் இலண்டன்) பாரதி இலக்கியச் செல்வர் திரு. கருணானந்தராசா (யுகபாரதி – இலண்டன்) கவிஞர். திரு. பொன் புத்திசிகாமணி…

ஐரோப்பாவின் தங்கத்தமிழ்க்குரல் போட்டிகள்

பார்வையும் செயற்பாடும் ஐரோப்பியத் தங்கத் தமிழ்க்குரலுக்கான பாடல் போட்டி நிகழ்ச்சியை லிபாராவின் ஆதரவுடன்  பன்னாட்டு ஒளிபரப்பு நிறுவன(ஐ.பி.சி.)த் தொலைக்காட்சி வழங்க இருக்கின்றது. நமது கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதோடு வெற்றியாளர்களுக்கு மாபெரும்  மதிப்புடன் பெரும் தொகையான பரிசுகளையும் வழங்க இருக்கின்றது ப.ஒ.நி.(ஐ.பி.சி.) தொலைக்காட்சி. இந்தப் போட்டியின் மூலம் சிறந்த ஐரோப்பிய தமிழ்ப் பாடகர்களை உலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளது  ப.ஒ.நி.(ஐ.பி.சி.) தொலைக்காட்சி. இறுதிப் போட்டியில் உலக அளவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் கலந்து போட்டியாளர்களைத் தெரிவு செய்ய உள்ளார்கள். தொடர்புகளுக்கும், விண்ணப்பங்கள் பெறுவதற்குமான தொலைபேசி இலக்கங்கள்….

மெய்வல்லுநர் போட்டி 2014

மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்திற்கான மெய்வல்லுநர் போட்டி ஆனி 1, 2045 / 15-06-2014 அன்று நடைபெற்றது.இப்போட்டி ஆல்பக்கு (Holbæk) நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்கள் பங்குபெற்றனர். இப்போட்டிகள் தென்மார்க்கு கொடியேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், ஒளிச்சுடரேற்றல், மாணவர்களின்அணிவகுப்பு போன்றவற்றுடன் தொடங்கின. மாணவர்கள் ஓட்டம், தடைஓட்டம், பழம்பொறுக்கல், படம்பொருத்துதல், சமநிலைஓட்டம், கயிறடித்தல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற விளையாட்டுகளை மிகவும் ஆர்வத்துடன்விளையாடினர். இவ்விளையாட்டுகளை விளையாடிய அனைத்து வீரர்களுக்கும்வீராங்கனைகளுக்கும் வெற்றிப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவீரர்களும்…